அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேலுக்கு மேலும் ஆயுதங்கள் ?

கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக காசாவை அழித்துக்கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கு மேலும் ஆயுத உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இஸ்ரேலின் வேண்டுகோளின் படி, நவீன பீரங்கிகள், இயந்திரத்துப்பாக்கிகள் உள்ளடங்கலாக பல ஆயுதங்களை வழங்கவுள்ளதாக “பென்டகன்” அறிவித்துள்ளது.

இது பற்றி பெண்டகன் ஊடகப்பேச்சாளர் “ஜோன் கேப்ரி” கூறும் போது, “இஸ்ரேலை பாதுகாக்கும் பொறுப்பில் அமெரிக்கா உறுதியாக இருக்கும். இஸ்ரேலின் தற்பாதுகாப்புக்கென உதவி செய்வது அமெரிக்காவின் கடமை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், “இஸ்ரேலில் உள்ள அமெரிக்காவின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து அதற்கு ஆயுதங்கள் வழங்கப்படும்” எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இஸ்ரேலுக்கு ஆயுதக் கொள்வனவு செய்வதை அமெரிக்க உடனடியாக நிறுத்தவேன்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கடுமையாக வேண்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.