அரபு மொழியைக் கற்றிருக்க வேண்டுமே! கைசேதப்படும் “பில் கேட்ஸ்”

பில் கேட்ஸ்

அரபுமொழி போன்ற பிற மொழிகள் எந்த ஒன்றையும் கற்க முடியாமல் போனதையிட்டு கைசேதப்படுவதாக உலகின் முதல்தரப் பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் “பில் கேட்ஸ்” கவலையுடன் தெரிவித்துள்ளார்.

Reddit எனும் பிரபல இணையதளத்தின் “AskmeAnything” எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே மேற்படி அவர் தெரிவித்துள்ளார்.

59 வயதை அடையும் “பில் கேட்ஸ்” மேலும் கூறும் போது, ” நான் எனது வாழ்க்கையில் செய்த சில தவறுகள் என்னை அறிவிலியாக நினைக்கச் செய்கின்றன.

பாடசாலைப் பருவத்தில் இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளை நான் கற்றுக்கொண்டேன். அதில் சிறந்த பெறுபேறுகளையும் நான் பெற்றுக்கொண்டுள்ளேன். அவ்விரண்டு மொழிகளும் பிற்காலத்தில் எனக்கு அதிகம் உதவின.

எனினும் பிரஞ்சு, அரபு மற்றும் சீன மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். போதிய நேரம் கிடைக்கும் பட்சத்தில் இம்மூன்று மொழிகளிலும் இலகுவான மொழியாகிய பிரஞ்சு மொழியைக் கற்றுக்கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 80 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான சொத்துக்களுக்குச் சொந்தக்காரரான பில் கேட்ஸ் உலகின் முதல்தரப் பணக்காரர்களுல் ஒருவராவார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.