Muslim & Tech World

“இதுவரை 131 சியோனிஸ்டுகளைக் கொன்றுள்ளோம்” – அல்கஸ்ஸாம்

அல்கஸ்ஸாம்

தொடர்ந்து 25 நாட்களாக பாலஸ்தீன் அப்பாவி மக்கள் மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான தாக்குதலில் இதுவரை 1300 க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் சஹீதாக்கப்பட்டுள்ளனர்.

பதிலுக்கு, ஹாமாசும் இஸ்ரேல் மீது பல ராக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டது. இன்று இரு பிரிவினரும் தங்களுக்கிடையில் 72 மணிநேர யுத்த நிறுத்த ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் யுத்தம் துவங்கியது முதல் தாம் 131 சியோனிஸ்டுகளைக் கொன்றுள்ளதாக ஹமாஸின் அல்கஸ்ஸாம் படையணி அறிவித்துள்ளது.

காஸா மீது நிகழ்த்தப்பட்ட தரைவழித் தாக்குதல் ஆரம்பித்ததில் இருந்து நேரடியான மோதல்கள் மூலமாக இவர்கள் கொல்லப்பட்டதாக அல்கஸ்ஸாம் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.

ஆனாலும், இது குறைந்த பட்ச கணக்கே தவிர, கொல்லப்பட்டு, தகவல் வெளியிடப்படாமலும் அதிகமானோர் இருக்கலாம் எனவும் அல்கஸ்ஸாம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.