இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்றோரின் தொகை 2.35 மில்லியனை அடைந்துள்ளது.

இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவுக்கு சமுகம் தந்தோரின் எண்ணிக்கை 2,352,122 ஜ எட்டியுள்ளது என ஸஊதி அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.

உள்நாட்டு ஹஜ்ஜாஜுகளின் எண்ணிக்கை 600,108 ஆகவும் வெளிநாட்டு ஹஜ்ஜாஜுகளின் எண்ணிக்கை 1,752,752 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

சென்ற வருடம் 1.86 மக்கள் ஹஜ்ஜுக்கு வந்ததாகவும் அதைவிட 26.3% வீதத்தால் இவ்வருடம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

சென்ற ஜூலை மாதத்தில் இருந்து ஸஊதி அரசாங்கம் ஹஜ்ஜுக்கு வருபவர்களை வரவேற்க ஆரம்பித்து விட்டது.

மக்கா பள்ளியில் நடைபெற்று வரும் விஸ்தரிப்பு காரணமாக நான்கு வருடங்களாக ஹஜ்ஜுக்கு வரும் மக்களில் உள்நாட்டவர்களின் தொகை 50% ஆலும் வெளிநாட்டவர்களின் தொகை 20% ஆலும் குறைத்து வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.