இஸ்ரேல் சார்பாக உளவு பார்த்த பாலஸ்தீனியன் ஒருவன் கைது !

காசா – இஸ்ரேல்

காசாவில் இஸ்ரேல் சார்பாக  உளவு பார்த்துக்கொண்டிருந்த ஒரு பாலஸ்தீனியனை ஹமாஸ் கைது செய்துள்ளது. மேலும், அவனிடமிருந்து கடைசியாக இஸ்ரேல் படைவீரன் ஒருவனுடன் பேசிய வீடியோ பதிவு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், பாலஸ்தீன் உளவாளி இஸ்ரேல் படைவீரனிடம் தனது தந்தைக்கு கண்ணில் செய்யப்படவுள்ள ஒரு சத்திர சிகிச்சைக்காக 2000 டொலர்கள் உதவி கோருவது பதிவாகியுள்ளது.

காசாவில் அண்மைக்காலமாக இஸ்ரேல் சார்பாக உளவு பார்த்த பல பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டனர்.

சில  நாட்களுக்கு முன், காசாவின் பாதைகளில் மன நோயாளி போன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்த ஒருவன் கைது செய்யப்பட்டான்.

இஸ்ரேல் சார்பாக உளவு பார்த்துக்கொண்டிருந்த இவன் வெளிப்படையில் மனநோயாளி போல் நடித்து நீண்ட நாட்களாக காசாவின் பாதைகளில் சுற்றிக்கொண்டிருந்தான்.

யுத்தம் ஆரம்பித்த போதுதான் இவன் உளவாளி என்பது தெரியவந்தது. இவனைக் கைது செய்யச் சென்றவர்களை இவன் துப்பாகியால் சுட முயற்சித்துள்ளான். தற்போது இவன் ஹமாசினால் கைது செய்யப்பட்டுளான்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.