ஈரான் – தலைநகரில் சுன்னி முஸ்லிம்களுக்கு இருந்த ஒரே பள்ளிவாசலும் தகர்ப்பு ..!!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் சுன்னி முஸ்லிம்களுக்கென்றிருந்த ஒரே பள்ளிவாசலும் ஈரான் இராணுவத்தால் நேற்று (புதன்கிழமை) தகர்க்கப்பட்டமை சமூகவலையதளங்களில் ஈரான் அரசுக்கெதிரான பெரும் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்துள்ளது.

அன்றைய தினம் காலையில் அப்பள்ளிவாசலின் இமாமான அப்துல்லாஹ் மூஸா என்பவரின் வீடு சோதனைக்குற்படுத்தப்பட்டு, அதன் பின்னர் பள்ளிவாசலும் சோதனைக்குற்படுத்தப்பட பின்னரே அது தகர்க்கப்பட்டுள்ளது.

குறித்த இப்பள்ளிவாசல் ஈரானிய அரசாங்கத்தால் சில மாதங்களுக்கு முன் சீல் வைக்கப்பட்டிருந்தது. அதன் பின் ஜும்மா, பெருநாள் போன்ற தொழுகைகள் தவிர்ந்த ஏனைய தொழுகைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஈரான் தலைநகராகிய தெஹ்ரானில் சுன்னி முஸ்லிம்களுக்கிருந்த ஒரே ஒரு தொழுமிடமும் இத்தோடு தகர்க்கப்பட்டு விட்டது. எனினும், அங்கு பல யூத வணக்கஸ்தலங்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும் எந்தவொரு தடங்கலும் இல்லாமல் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.