Muslim & Tech World

உலக நாடுகளை அச்சுறுத்தும் ISIS இன் ஆயுத பலம்!

பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் அளவு சக்தி வாய்ந்த ஆயுதங்கள்  ISIS இடம் காணப்படுவது உலக மற்றும் உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு அச்சுறுத்தலாகக் காணப்படுதுவதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் “டெய்லி மெயில்” என்ற பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

ISIS இன் ஆக்கிரமிப்புக்குட்பட்ட மௌஸில் மற்றும் அதைச் சூழாக உள்ள பிரதேசங்களுக்கு மேலால் தினமும் நூற்றுக்கணக்கான வான் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, தென்னாபிரிக்கா, துபாய் போன்ற நாடுகளின் விமானங்கள் அடிக்கடி அப்பிரதேசத்துக்கு மேலால் பறந்து செல்கின்றன. எனவே, இச்சந்தர்ப்பத்தில் விமானங்களை சுட்டு வீழ்த்துமளவு சக்தி வாய்ந்த ஆயுத பலத்தைக் கொண்டுள்ள ISIS பிரிவினரால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. கட்டார் மற்றும் பிரித்தானிய விமானங்களும் இப்பிரதேசத்தை தங்கள் வான் பயணங்களுக்கு பயன்படுத்துகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலேசியாவின் MH17 என்ற விமானம் உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட பின்னரே இப்பயம் அதிகரித்துள்ளது.

இராக்கின் பல ஆயுதத் தொழிற்சாலைகள், கிடங்குகள் போன்றவற்றை தம்வசப்படுத்தியுள்ள ISIS மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.