Muslim & Tech World

காஸா விடயத்தில் இஸ்லாமிய சமூகத்தின் மௌனத்தை நியாயப்படுத்த முடியாது! – மக்கா இமாம் ஸுதைஸ்

காஸா மற்றும் சிரியா

“காஸா மற்றும் சிரியா விடயத்தில் இன்று சர்வதேச மற்றும் இஸ்லாமிய சமூகங்கள் கடைப்பிடிக்கும் மௌனத்தை நியாயப்படுத்தும் மனிதாபிமான அல்லது மார்க்க ரீதியான எந்தக் காரணங்களும் இல்லை” என புனித மஸ்ஜிதுல் ஹராமின் பிரதம இமாம் அப்துர்ரஹ்மான் சுதைஸ் அவர்கள் தங்களுடைய இன்றைய குத்பாவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இஸ்லாத்தை அளிக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராகவும், உண்மையான ஜிஹாதின் புனிதத்துவத்திக்கு பங்கம் விளைவிக்கும் சக்திகளுக்கு எதிராகவும் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே வரிசையாக நின்று செயற்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறிப்பிடும் போது, “ஒரு முஸ்லிம் தலைவருக்குக் கட்டுப்பட்டு, இயக்கவேறுபாடு, கட்சி வேறுபாடு போன்றவற்றை விட்டும் தவிர்ந்து நடப்பதன் மூலமே குழப்பங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்” என்றும் குறிப்பிட்டார்.

அதே போன்று, அவர் தன்னுடைய குத்பாப் பிரசங்கத்தில் இன்று ஜிஹாத் என்ற பெயரில் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை எந்த நியாயமான காரணமும் இல்லாமல் கொள்வதைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

அது இந்த உம்மத்தைப் பிளவு படுத்தக்கூடியது என்றும், அதனால் அமைதி, நிம்மதி என்பன முஸ்லிம் சமூகத்தில் இழக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

அதே போல, “நஞ்சூட்டப்பட்ட அம்புகளை உடையவர்கள் தங்கள் அம்புகளை இரு புனிதஸ்தலங்களின் நாடாகிய இந்த நாட்டை நோக்கி எறிய முனைகின்றனர்” என்றும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.