கிறிஸ்தவ மதமாற்றம் – மியன்மார் அகதிகள் முகங்கொடுக்கும் அடுத்த ஆபத்து!

இந்தியா

இந்தியாவில் இருக்கும் ரோஹஞ்சிய மியன்மார் முஸ்லிம்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் முயற்சிகள் கடுமையாக நடந்து வருவதாக அராகான் செய்தி நிறுவனம் (ANA) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர் ஒருவர் இந்தியாவில் உள்ள மியன்மார் ரோஹஞ்சிய முஸ்லிம்களின் அகதி முகாம்களுக்கு சென்று பிரச்சாரகத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளது.

குறித்த அந்த மதப்பிரச்சாரகர் இஸ்லாத்தில் சந்தேகத்தை உண்டுபண்ணும், கிறிஸ்தவ மதத்தின் பக்கம் தூண்டும் வீடியோக்களை அந்த அகதிளுக்கு காட்டி அவர்களை கிறிஸ்தவ மதத்தின் பக்கம் அழைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவர் ரோஹஞ்சிய மொழியை சரளமாகப் பேசக்கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அங்கிருக்கும் அகதிகளில் உள்ள உளம் பெண்கள் முஸ்லிம்களுக்கு திருமணம் செய்துவைப்பதாகக் கூறி ஏமாற்றப்பட்டு இந்துக்கள், சீக்கியர்களுக்கு விற்கப்படுவதாகவும் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.