Muslim & Tech World

சர்ச்சையைக் கிளப்பும் “மெஸ்ஸியின்” புகைப்படங்கள் !!!

ஆர்ஜென்டீனாவின் பிரபல கால்ப்பந்தாட்ட வீரரான லயோனல் மெஸ்ஸியின் சில புகைப்படங்கள் சமூகவளையதலங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அநியாயக்கார இஸ்ரேலுக்கு சார்பான வாசகங்கள் பொறிக்கப்பட்ட டி ஷர்ட் ஒன்றை மெஸ்ஸி வைத்துக்கொண்டிருப்பது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. அதே போன்று இஸ்ரேல் புனிதமாகக் கருதும் சுவர் ஒன்றின் முன் யூதர்களுடைய வணக்க வழிபாடுகளை மெஸ்ஸி செய்வது போன்றும், யூதர்கள் குழுவொன்றுடன் இருப்பது போன்றும் பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனால் மெஸ்ஸி ஒரு இஸ்ரேல் ஆதரவாளரா? என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.

ஆனாலும், இஸ்ரேலுக்கு சார்பான வாசகங்கள் பொறிக்கப்பட்ட டி ஷர்டை மெஸ்ஸி சுமந்துகொண்டிருப்பதாக வந்திருக்கும் புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டுள்ளன என்றும், உண்மையில் அவர் பாலஸ்தீன் சார்பான ஒரு வாசகம் பொறிக்கப்பட்ட டி ஷர்ட் ஒன்றைத் தான் வைத்துக்கொண்டிருந்தார் என்பதாகவும் கூறப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, மெஸ்ஸி தனக்கு உலகக்கிண்ண கால்ப்பந்தாட்டத்தில் கிடைத்த பரிசுத் தொகையில் ஒரு மில்லியன் டொலரை இஸ்ரேலுக்கு வழங்கியதாகவும் ஒரு செய்தி அரபு இணையதளங்களில் பரவுகின்றது, ஆனாலும் இச்செய்தி  ஒரு பிரான்ஸ் இணையதளமொன்றை மேற்கோள் காட்டியே வெளியானதெனவும், அவ்வூடகம் நம்பகத்தன்மை அற்றது என்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.