Muslim & Tech World

“சார்ஜர்களுக்கு பிரியாவிடை…” இனி உங்கள் வாயாலே சார்ஜ் பண்ணலாம்…!!!

சார்ஜர்களுக்கு பிரியாவிடை…

கையடக்கத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினைதான் “சார்ஜ்”. குறிப்பாக ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் அதிகம் முணுமுணுக்கும் விடயம்தான் “விரைவாக பேட்டரி சார்ஜ் இறங்கிவிடுகிறதே” என்பது.

ஆம்…உங்கள் இக்கவலை வெகுவிரைவில் நீங்கப்போகிறது. “தொழிநுட்ப உலகின்” ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பாக “வாயினால் சப்தமிடுவதன் மூலம்” பேட்டரிகளை சார்ஜ் செய்யும் ஒரு முறை வெகுவிரைவில் வர இருக்கின்றது. இவ்வற்புத கண்டுபிடிப்பை லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச “நோக்கியா” நிறுவனம் ஆகியன இணைந்தே கண்டுபிடித்துள்ளன.

இப்புதிய கண்டுபிடிப்பின் மூலம், ஒலியலைகள் மூலமாக எமது கைத்தொலைபேசிகளை சார்ஜ் செய்யலாம். எங்களுடைய சப்தம் எந்தளவு அதிகரிக்கிறதோ அந்தளவு வேகமாக சார்ஜ் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு வெற்றிகரமாகப் பரிசீலக்கப்பட்ட போதிலும், தொடர்ந்தும் இன்னும் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.  இது முழுமையாகப் பரிசீலக்கப்பட்ட பின்னர் வெகுவிரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

நன்றி : مفكرة الإسلام

You might also like

Leave A Reply

Your email address will not be published.