தாயைக் கொன்று பயணப்பொதிக்குள் அடைத்த அமெரிக்க யுவதி!

அமெரிக்க யுவதி

தனது ஆண் நண்பனுடன் இணைந்து தனது தாயைக்கொன்றதாக சந்தேகிக்கப்படும் அமெரிக்கா யுவதி ஒருவரைப் இந்துனேசிய போலீசார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் தனது தாயுடன் தங்கிய ஹோட்டல் ஒன்றிற்கு முன் தாயுடைய சடலம் ஒரு பயணப்பெட்டியில் அடிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்த பின்னரே போலீசார் இந்த யுவதியைக் கைது செய்துள்ளனர்.

இது பற்றி பிரேதத்தைப் பரிசோதித்த வைத்தியர்கள் கூறும் போது, “62 வயதுடைய அந்தப் பெண் தலையில் பாரிய தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாக” தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடப்பதற்கு முன்னைய நாள் அந்தப் பெண் சந்தேக நபரான தனது மகளுடன் அந்த ஹோடேலில் தங்கியுள்ளாள்.

அன்றைய இரவு தாய்க்கும் மகளுடைய ஆண் நண்பனுக்கும் மத்தியில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்தமை கேமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் நடந்த பின் மறுநாள் அதை விட சற்று தூரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து மகளும் அவளுடைய ஆண் நண்பனும் கைது செய்யப்பட்டனர்.

அன்றைய தினம் ஹோட்டலில் இருந்து வெளியேருவதற்கு வாகனமொன்றைக் கூலிக்கு பேசிய இருவரும், வாகனத்தில் பொதிகளை ஏற்றிவிட்டு ஹோட்டலின் பின்புறத்தால் தப்பிச் சென்றுள்ளனர்.

நீண்ட நேரமாகியும் இருவரும் திரும்பி வராததை அவதானித்த வாகன சாரதி போலீசில் முறைப்பாடு செய்யவே இவ்விடயம் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்விருவரும் ஹோட்டலின் பின் புறத்தால் தப்பிச் சென்றது கேமராவில் பதிவாகியுள்ளது.

நன்றி : سبق

You might also like

Leave A Reply

Your email address will not be published.