நேர்வழி இறைவனிடமிருந்தே…! படிப்பினைக்கோர் உண்மைச் சம்பவம்

வெளிநாடுகளில் உள்ள பெரிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கச் செல்வோர் வாழ்க்கையில் எப்போதுமே மறக்கமுடியாத பல சம்பவங்கள், நிகழ்வுகளைச் சந்திக்கின்றனர். இங்கு இவ்வாறு வெளிநாடென்றில் கல்வி கற்கச் சென்ற அரபு நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவன் தான் சந்தித்த ஒரு மறக்கமுடியாத நிகழ்வை விவரிக்கின்றார்.

‘நான் ஒரு ஐரோப்பா நாடொன்றில் உள்ள பழைமை வாய்ந்த பல்கலைக்கழகம் ஒன்றில் அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களிடம் கல்வி கற்கச் சென்றிருந்தேன். அனைத்து கல்வியாளர்களுக்கும் தலைமை ஆசிரியராக ஆசிய நாடொன்றைச் சேர்ந்த பிரபல்யமான ஒரு பேராசிரியரே காணப்பட்டார். அவர் மிகச் சிறந்த, அனுபவம் வாய்ந்த ஒரு அறிவாளியாகக் காணப்பட்டார். அவருடைய பெயர் வராத எந்தவொரு அறிவியல் சஞ்சிகையோ, அவர் கலந்துகொள்ளாத எந்தவொரு மாநாடோ இல்லை என்று கூறும் அளவு மிகவும் பிரபல்யமான ஒரு அறிஞராகக் காணப்பட்டார்.

ஒரு முறை மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், கற்பித்தல் முறை சற்று வித்தியாசமாக அமையும் விதத்திலும் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொள்ளும் ஒரு கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.

சுற்றுலாவில் நாம் எமது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது எங்களுடனிருந்த எமது தலைமை ஆசிரியரை திடீரென காணாமல் போக அவரைத் தேடி நாம் சென்றோம். அப்போது தான் அந்த ஆச்சரியமான காட்சியைக் கண்டோம்.

ஒரு மரத்தின் அடிவாரத்தில் மூடப்பட்ட சிறுபெட்டியொன்றை தன்முன் வைத்த வண்ணம் குனிந்தவராக சில வசனங்களை ஓதித் தியானம் செய்துகொண்டிருந்தார். அவர் தியானம் செய்து கொண்டிருந்தது ஒரு மாட்டின் சாணத்துக்கே!

இந்தப் பேராசிரியரின் அறிவு எங்கு சென்றுவிட்டது? சிக்கலான பிரச்சினைகள், கணக்குகளை எல்லாம் மிக இலேசாகத் தீர்க்கும் இவருடைய பிரமாண்டமான புத்திக்கு இந்த சிறுவிடயம் புரியவில்லையா? எந்தவொரு தீங்கோ, நலவோ செய்யாதவற்றை வணங்குவது சாதாரணமாக நடக்கும் விடயம்தான். ஆனால் உலக மக்கள் அனைவருமே அறுவறுப்பானதாகவும், அசுத்தமானதாகும் கருதக்கூடிய இந்த சாணத்தை வணங்குவதை அவருடைய புத்தி எவ்வாறு ஏற்றுக்கொண்டது? நாம் இதுபற்றி அவரிடம் கேட்ட போது, ‘எங்களுக்கு பால் தரும் மாட்டை நாம் வணங்கக்கூடாதா?’ என்று கேட்டார்.

இந்த நிகழ்வின் மூலம் நாம் ஒரு யதார்த்தத்தை தெரிந்துகொள்ள முடிகிறது. ‘நேர்வழி என்பது வெருமனே புத்தியால் அல்லது அறிவால் மாத்திரம் அடைந்துகொள்ளக்கூடியது அல்ல’. எத்தனையோ பெரிய அறிவாளிகள் மார்க்கத்தின் யதார்த்தங்களைப் புரிந்து கொள்ளாமல் இறைவனை மறுத்தவர்களாகவே வாழ்ந்து, மறுத்தவர்களாகவே மரணித்துள்ளார்கள். எத்தனையோ சாதாரண விவசாயிகள் வானத்தின் நீலத்திலும், காற்று வீசுவதிலும், நீர் பாய்ந்து ஓடுவதிலும் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான ஆதாரத்தைக் கண்டுகொண்டுள்ளார்கள்.

இவ்வனைத்தும் உணர்த்தக்கூடிய விடயம் என்னவெனில் உண்மையை ஏற்றுக்கொள்தல் எனப்படும் நேர்வழி என்பது இறைவனின் கையில் மாத்திரமே உள்ளது. அது அவனுக்கே சொந்தமானது. தான் நாடியவர்களுக்கு அதை வழங்குகின்றான். தான் நாடியவர்களை விட்டும் அதைத் தடுக்கின்றான். ‘அவர்களை நேர்வழிப்படுத்துவது (உண்மையை ஏற்றுக்கொள்ளச் செய்வது) உங்கள் கடமையல்ல. மாறாக, அல்லாஹ்வே தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகின்றான்.’ (அல் குர்ஆன்). ‘நபியே! நீர் கூறுவீராக : நிச்சயமாக சிறப்பு அல்லாஹ்வின் கையிலே உள்ளது. தான் நாடிவர்களுக்கு அதை வழங்குகின்றான். மேலும் அல்லாஹ் விசாலமானவன். யாவற்றையும் அறிந்தவன். தான் நாடியவர்களுக்கு தன்னுடைய அருளை வழங்குகின்றான். அல்லாஹ் மகத்தான சிறப்புடையவன். (அல் குர்ஆன்). நபி நூஹ் (அலை) அவர்கள் தங்கள் கூட்டத்தைப் பார்த்து இவ்வாறு கூறினார்கள் : ‘அல்லாஹ் உங்களை வழிதவறச் செய்வதை நாடியிருந்தால் நான் உங்களுக்கு உபதேசம் செய்ய நாடினாலும் என்னுடைய உபதேசம் உங்களுக்கு பிரயோஜனம் அளிக்காது’ (அல் குர்ஆன்). இவ்வசனங்கள் மூலம் தெளிவாகப் புலப்படும் விடயம் என்னவெனில் நேர்வழி என்பது அல்லாஹ்விடமே உள்ளது. தான் நாடியவர்களை நேர்வழிப்படுத்தகின்றான். யாரை நேர்வழி பெற தகுதியானவனாகக் காண்கிறானோ, அவனை நேர்வழிப்படுத்துகின்றான். யாரைத் தகுதியற்றவனாகக் காண்கிறானோ அவனை வழிகேட்டிலேயே விட்டுவிடுகிறான்.

இதை நாம் புரிந்து கொண்டால், இந்த இறைநேர்வழியை யாவற்றையும் நன்கறிந்த இறைவனின் அறிவுடனும், அவனது அருள் மற்றும் நீதத்துடனும் இணைத்துப்பார்க்கலாம். எனவே, இந்த விவகாரத்தை ஒரு குறுகிய பார்வை கொண்டு பார்க்கமுடியாது. நேர்வழிக்குத் தகுதியானவரே நேர்வழி அடைவார். யார் நேர்வழி எனும் அருளுக்குத் தகுதியற்றவராகிவிடுகின்றாரோ அவருக்கு அது கிடைக்காது. எனவே, கிடைப்பதும் கிடைக்காமலிருப்பதும் இறைவனின் நியாயத்தில் உள்ளது.

சுருக்கம் என்னவெனில் நேர்வழியை அடைவது என்பது இறைவனிடமே உள்ளது. அதை அடைந்துகொள்வதோ, அல்லது அதில் நிலைத்திருப்பதோ இறைவனைக் கொண்டே உள்ளது. தன்னுடைய அடியார்களில் தான் நாடியவர்களை அவன் தேர்ந்தெடுக்கின்றான்.

எனவே, இஸ்லாம் எனும் நேர்வழியை அனைவருக்கும் வழங்கவும், அதை அடைந்த எம்மை அதில் உறுதியாக வைக்கவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்!

நன்றி : صحيفة البشرى

You might also like

Leave A Reply

Your email address will not be published.