பக்தாத் , அஸ்ஸத்ர் பகுதியில் உள்ள மக்கள் சந்தையில் கார் குண்டுத் தாக்குதலில் 50 க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர்.

பக்தாதின் கிழக்கே உள்ள ஷீஆக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான அஸ்ஸத்ர் பகுதியின் மக்கள் சந்தையில் இன்று கார் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து அப்பிரதேச வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கும் போது “சற்று முன்வரை கொல்லப்பட்டவர்களின் தொகை 50 ஐயும் காயப்பட்டவர்களின் தொகை 100 ஐயும் தாண்டியுள்ளது” எனக் குறிப்பிடுகின்றன.

மேலும் இதன் தொகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி : قناة الجزيرة


You might also like

Leave A Reply

Your email address will not be published.