Muslim & Tech World

பதவி விலகினார் ஈராக் பிரதமர் நூரி அல்மாலிகி !

ஈராக்

ஈராக்கில் உள்நாட்டு குழப்பங்கள் அதிகரித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் நீண்ட காலமாக ஈராக்கின் பிரதமராக பதவி வகித்து வந்த நூரி அல்மாலிகி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஈராக் மக்களின் உயிர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இராக் ஜனாதிபதி புஆத் மாசூம் அவர்களால் அரசாங்கம் அமைக்குமாறு நியமிக்கப்பட்டுள்ள ஹைதர் அப்பாதிக்கு தன்னுடைய ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஈராக்கில் போராடிவரும் ISIS தீவிரவாதிகளுக்கு எதிராக உதவி செய்யுமாறு அமெரிக்காவிக்கு நூரி அல்மாலிகி அழைப்பு விடுத்திருந்தார்.

இருப்பினும் அமெரிக்கா  அவருக்கு எதிராக ஈராக் ஜனாதிபதியுடன் கைகோர்த்து பிரதமரை பதவி விலகுமாறு வற்புறுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.