பாகிஸ்தான் : அரசுக்கெதிரான பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு !

பாகிஸ்தான் :

எதிர்வரும் வியாழக்கிழமை அரசை வீழ்த்துவதற்கான பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் பாகிஸ்தானின் சூபித் தலைவர் “தாஹிர் அல்காதிரி”.

இது பற்றி அவர் கூறும் போது : “எங்களுடைய பேரணி எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பிக்கும், அரசை வீழ்த்துவதற்காக வேண்டி அப்பேரணி இஸ்லாமாபாத் வரை செல்லும்” என்று குறிப்பிட்டார்.

“தாஹிர் அல்காதிரி” பாகிஸ்தானில் இருக்கும்  ஒரு பிரபல்யமான வழிகெட்ட சூபித் தலைவராகும். “மின்ஹாஜுள் குர்ஆன் அல்ஆலமிய்யாஹ்” என்ற பெயரில் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் இவர் ஒரு அமைப்பை செயற்படுத்தி வருகிறார்.

அண்மையில் பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில் ஒரு பொலிசார் கொல்லப்பட்ட சம்பவத்துடன் இவருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இவர் இவர் பயங்கரவாதச் செயல்களுக்குத் தூண்டுவதாகவும், வன்முறையைக் கிளப்புவதாகவும் இவர் மீது போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.