“பார்வை” மூலம் இயங்கும் “சக்கர நாற்காலி” – சவுதி அரேபிய மாணவன் கண்டுபிடிப்பு..!

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற “கண்டுபிடிப்புகளுக்கான சர்வதேச “ITEX” கண்காட்சியில்” சவுதி அரேபியாவைச் சேர்ந்த, உயர்தர வகுப்பில் கல்விகற்கும்  “அலி முஹம்மத் ஹத்தாத்” (17 வயது) என்ற மாணவன், பார்வையின் மூலம் இயங்கும் “சக்கர நாற்காலி” ஒன்றைக் கண்டுபிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளான்.

கை, கால்கள் முடமான அங்கவீனர்களுக்கு இலேசுபடுத்தும் நோக்கில், அங்கவீனர்களால் பயன்படுத்தப்படும் “சக்கர நாற்காலிகளில்” இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இக்கண்டுபிடிப்பு பற்றி மேலும் தெரியவருவதாவது, இச்சக்கர நாற்காலிகளில் ஒரு “திரை” பொருத்தப்பட்டிருக்கும். அது சில “BUTTON”களைக் கொண்டிருக்கும். அந்த “BUTTON” களை தொடர்ந்து மூன்று செக்கன்களுக்கு பார்ப்பதன் மூலம் முன் செல்லல், திரும்புதல், சுற்றுதல் நிறுத்துதல் போன்ற கட்டளைகளை செயற்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது. இது தவிர இன்னும் பல வசதிகளும் அதில் இணைக்கப்பட்டுள்ளன.

மலேசியாவில் நடைபெற்ற இக்கண்காட்சியில் சவுதி அரேபியா 8 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

நன்றி : الوطن أون لاين

You might also like

Leave A Reply

Your email address will not be published.