பிரான்ஸ் : “சார்லி ஹெப்டோ” தாக்குதலுக்குப் பின் வேகமாக வளரும் இஸ்லாம் !!

பிரான்ஸ் :

கடந்த ஜனவரி மாதம் ஆரம்பத்தில் பிரான்சின் “சார்லி ஹெப்டோ” எனும் பத்திரிக்கை நிறுவனத்தின் மீது சில தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது அறிந்த விடயமே.

இத்தாக்குதலை நடத்தியோர் யார் என இன்னும் உறுதியாகக் கண்டுபிடிக்கப்பவில்லை. இதன் பின்னணியில் பெரும்பாலும் யூதர்கள் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

எனினும், நபியவர்களுக்கெதிராக கேலிச்சித்திரம் வெளியிட்ட இந்த “சார்லி ஹெப்டோ” பத்திரிக்கை நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின், பிரான்சில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வோர் தொகையும், குர்ஆனைப் படிப்போர் எண்ணிகையும் வேகமாக வளர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்செய்தியை பிரான்சின் R .T.L. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட தினமான ஜனவரி 7 முதல் அம்மாத இறுதிவரை மாத்திரம்  பிரான்ஸ் தலைநகர் பெரிஸின் பிரதான பள்ளிவாசலில் 40 பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த 2014 ஜனவரி மாதத்தில் அங்கு  22 பேர் இஸ்லாத்தை ஏற்றக்கொண்டிருந்தனர். இதேவேளை பிரான்சின் பெரும் நகரங்களான ல்யோன் மற்றும் ஸ்ட்ராஸ்பர்க் ஆகிய நகரங்களிலும் பெருந்தொகையானோர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

“சார்லி ஹெப்டோ” தாக்குதலுக்குப் பின் இஸ்லாம் பற்றிய ஒரு மோசமான பதிவு ஏற்படலாம் என அங்கிருந்த இஸ்லாமிய பிரச்சார அமைப்புக்கள் பயந்த போதிலும், அதற்கு நேர்மாற்றமாக எதிர்பாராத அளவு பிரான்ஸ் மக்கள் இஸ்லாத்தைப் படிக்க ஆரம்பித்துள்ளனர்.

எதிர்பாராத அளவு பெருந்தொகையான குர்ஆன் பிரதிகள் வாங்கப்பட்டுள்ளதுடன், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வோர் தொகையும் எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளது.

சென்ற வருடத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் பிரான்சின் பிரதான நகரில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை 20 வீத வளர்ச்சி கண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு பெண் கூறும் போது, “சார்லி ஹெப்டோ தாக்குதலின் பின் இஸ்லாத்தையும் பயங்கரவாதத்தையும் இணைத்துப் பேசியமையே என்னை இஸ்லாத்தில் நுழையவைத்தது.

அதன் பின்னர் இஸ்லாம் இவ்வாறான ஈனச்செயலை ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்பதை நான் அறிந்துகொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், வைத்தியர்கள் என பலதரப்பட்டோர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாகவும், இதுவரை காணாத அளவு பெருந்தொகையானோர் இஸ்லாத்தைத் தழுவியதாகவும் அங்குள்ள பள்ளிவாயல்களின் இமாம்கள் ஒட்டுமொத்த கருத்தாகக் கூறியுள்ளனர்.

பிரான்சின் “La procure” எனும் புத்தக நிலைய அதிகாரி ஒருவர் கூறும் போது, “எமது புத்தக நிலையத்தில் இருந்த அனைத்து குர்ஆன் பிரதிகளும் தாக்குதல் நடந்து இருவாரங்களுள் விற்றுத் தீர்ந்துவிட்டது” எனக் கூறியுள்ளார்.

நன்றி : مفكرة الإسلام

You might also like

Leave A Reply

Your email address will not be published.