பிரிட்டிஷ் : ஒரே நாளில் காஸா மக்களுக்காக 4.5 ஸ்ரேலிங் பவ்ன் சேகரிப்பு!

பிரிட்டிஷ் :

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உட்பட்டுள்ள காஸா மக்களுக்காக பிரித்தானியாவில் நாடளாவிய ரீதியில் சேகரிக்கப்பட்ட நன்கொடைகளில் 24 மணி நேரத்துக்குள் 4.5 ஸ்ரேலிங் பவ்ன் (கிட்டத்தட்ட ஒரு பில்லியன் இலங்கை ரூபாய்கள்) சேகரிக்க முடிந்ததாக பிரித்தானியாவின் “அவசர அனர்த்தக் குழு” அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் காணப்படும் மிகப்பெரிய பதிமூன்று மனிதநேய அமைப்புக்களை உள்ளடக்கியுள்ள அக்குழுவின் தலைவர் ஸாலிஹ் ஸஈத் அவர்கள் பிரித்தானிய மக்களின் இந்தக் கொடையை பாராட்டிய அதேவேளை, “இன்று காஸா மக்கள் முகம் கொடுக்கும் இந்தப் பாரிய அநியாயத்தின் காரணமாக நிறைய மனிதாபிமான உதவிகள் அவர்களுக்கு தேவைப்படுகின்றன” என்றும் குறிப்பிட்டார்.

மேலும், “இலட்சக்கணக்கான மக்கள் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு அகதிகளாகச் செல்கின்றனர் எனவும், காஸா மக்களுக்கான அத்தியாவசிய சுகாதார வசதிகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன” எனவும் அவர் தெரிவித்தார்.

பிரித்தானியாவின் இந்த அவசர அனர்த்தக் குழுவில் சர்வதேச நிறுவனங்களான செம்பிறைச் சங்கம், செஞ்சிலுவைச் சங்கம் போன்றனவும் இணைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.