“பெண்ணுரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்”

(இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோர் : தொடர் – 2)

“இஸ்லாம் ஒரு உலகலாவிய மார்க்கம். அது நீதி, விட்டுக்கொடுப்பு, கண்ணியம் என்பவற்றின் பக்கம் அழைக்கின்றது”
“இஸ்லாம் பற்றி நான் வாசித்த போது அது மனிதனை சிந்திக்க வைப்பதில் கவனம் செலுத்துவதால் அதiனுடைய அழைப்பு என்னைக் கவர்ந்தது”
“செப்டம்பர் 11 நிகழ்வுக்குப் பின் என்னுடைய அதிகமான நேரங்களை அனைவர் முன்னிலையிலும் இஸ்லாத்தைப் பாதுகாப்பதிலேயே செலவிட்டுள்ளேன்.”
“ஹிஜாப் என்னை முடமாக்கவில்லை. அது என்னுடைய சிந்தனைகள் என் மூலையைச் சென்றடைவதை விட்டும் தடுக்கவில்லை”
“மேற்கத்தவர்கள் பெண்ணை ஒரு பொருளாகப் பார்த்த அதேவேளை இஸ்லாம் பெண்ணை இறைவன் முன்னிலையில் ஆணுக்கு சமனாக நிறுத்தியது”

அமெரிக்காவின் CNN இணையதளம் இஸ்லாத்தைத் தழுவிய, பெண்ணுரிமைக்காகப் போராடும் அமெரிக்காவைச் சேர்ந்த “தெரேஸா கோர்பின்” என்பவரைப் பேட்டி கண்டது. கொள்கை பற்றி தன்னிடமிருந்த கேள்விகள், பெண்ணுரிமை பற்றி அவரிடமிருந்த சந்தேகங்கள் அனைத்துக்கும் இஸ்லாத்தில் பதில் கிடைத்ததாகக் கூறினார்.
யார் இந்த தெரேஸா கோர்பின்?
தெரேஸா கோர்பின் அமெரிக்காவின் “நிவ் ஓலியன்ஸ்” நகரில் வசிக்கும் ஒரு எழுத்தாளர். “Islamwich” எனும் ஸ்தாபனம் மற்றும் அதன் இணையதளத்தின் நிறுவனர். மற்றும் “On Islam” > “Aquila Style”  ஆகிய இணையதளங்களில் ஒரு எழுத்தாளர்.
செப்டம்பர் 11 நிகழ்வுக்கு இரண்டு மாதங்களின் பின் தனது 21 வயதில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நேரம் முஸ்லிம்கள் பற்றிய தவறான ஒரு பதிவு காணப்பட்ட நேரமாக இருந்த போதிலும் நான்கு வருடங்கள் இஸ்லாத்தை நன்கு படித்தபின்னரே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
இவரது பெற்றோர்களில் ஒருவர் கத்தோலிக்கராகவும் மற்றவர் நாத்திகராகவும் காணப்பட்டார். சிறுவயதில் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றிக்கொண்டிருந்த இவர், வளர்ந்ததும் நாத்திகராக மாறினார். தற்போது இஸ்லாத்தைத் தழுவியுள்ளார்.
இஸ்லாத்தை நோக்கிய பயணம் :
தெரேஸா கோர்பின் கூறுகின்றார் : “இஸ்லாத்தை நோக்கிய எனது பயணம் என்னுடைய 15 வயதில் ஆரம்பித்தது. நம்பிக்கை, மற்றும் கொள்கை சார்ந்த பல கேள்விகள் என்னுடைய உள்ளத்தில் எழுந்துகொண்டிருந்தன. ஆனால், இந்தக் கேள்விகளை கிறிஸ்தவ மத அறிஞர்களிடம் கேட்டபோது, அவர்களின் பதில் “இந்த விடயங்களில் உன்னுடைய சிந்தனையை செலவழிக்காதே” என்றே காணப்பட்டது. எனினும், இந்த பதில் என்னை திருப்திப்படுத்தவில்லை.
சில காலங்கள் இப்படியே என்னுடைய சிந்தனைகள் அனைத்தும் வரலாறு மற்றும் கொள்கை பற்றியே இருக்கும் போது, ஒரு மார்க்கத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். அது எனக்கு அறிமுகமற்ற ஒரு மார்க்கமாகக் காணப்பட்டது. அதுதான் இஸ்லாம். இஸ்லாத்தைப் பற்றி நான் அதிகம் வாசித்த பின், இஸ்லாம் என்பது வெருமனே ஒரு காலாசாரமாகவோ, வணக்கவழிபாடுகளை மாத்திரம் கொண்டுள்ளதாகவோ இல்லை என்பதை நான் அறிந்துகொண்டேன். மேலும் இஸ்லாம் என்பது பணிவு, பொறுமை, ஒத்துழைப்பு என்பற்றைத் தூண்டுகின்ற, நேர்மை, கண்ணியம், விட்டுக்கொடுப்பு ஆகியவற்றின் பக்கம் அழைக்கின்ற ஒரு மார்க்கம் என்பதையும் அறிந்துகொண்டேன்.
இஸ்லாமியக் கொள்கையை படித்தபோது வர்ணிக்கமுடியாத அளவு சந்தோசத்தை நான் பெற்றுக்கொண்டேன். ஏனெனில், இஸ்லாம் அதைப் பின்பற்றுபவர்களுக்கு மூஸா, ஈஸா (அலைஹிமுஸ்ஸலாம்) உட்பட அனைத்து நபிமார்களையும் கண்ணியப்படுத்துமாறு கூறுகின்றது. அவர்கள் அனைவரும் ஓரே இறைவனையே வணங்குமாறு அழைத்தார்கள். உயர்ந்த இலச்சியமாகிய மறுமைக்கு தயாராகுமாறு அழைத்தார்கள் என்றும் கூறுகின்றது.
மேலும், இஸ்லாத்தைப் பற்றி நான் வாசித்த போது, அது மனிதனை சிந்திக்கத் தூண்டுவதினால் அதனுடைய அழைப்பின் பக்கம் நான் கவரப்பட்டேன். குவாரிஸ்மி (அட்சர கணிதத்தின் தந்தை), பின் பிர்னாஸ் (முதன் முதலாக விமானத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்தவர்), அபுல் காஸிம் அஸ்ஸஹ்ராவி போன்ற முஸ்லிம் விஞ்ஞானிகளின் அறிவுத்திறமையைப் பார்த்து வியந்தேன்.
முடிவெடுத்தல்
2001ம் ஆண்டு, மக்கள் சிலவேளை ஏதாவது கூறலாம் என்ற எண்ணத்தில் என்னுடைய முடிவை சற்று பிற்போட்டேன். செப்டம்பர் 11 நிகழ்வு என்னை அதிகம் பீதிக்குள்ளாக்கியது. எனினும் அந்த நிகழ்வுக்குப் பின் எனனுடைய அதிகமான நேரங்களை அனைவர் முன்னிலையிலும் இஸ்லாத்தைப் பாதுகாப்பதிலேயே செலவிட்டேன்.
இவ்வாறு நான் தொடர்ந்து இஸ்லாத்துக்கு சார்பாகப் பேசி, அதற்காகவவே தர்க்கித்துக் கொண்டிருந்ததால் என்னுடைய பயம் நீங்கிவிட்டது. நான் நம்பிக்கை கொண்டுள்ள அந்த இஸ்லாம் மதத்தில் இணைவதை அறிவிக்க முடிவுசெய்தேன்.
என்னுடைய குடும்பத்தினர் இந்த விடயத்தைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்களை இந்த முடிவு திடுக்கிடச்செய்யவுமில்லை. ஏனெனில் நான் நீண்ட காலமாகவே மதங்கபை; படித்துக்கொண்டிருந்தேன். அதனால், ஏற்கனவே என்னுடைய குடும்பத்தினர் நான் மதம் மாறிவிடுவேனோ என்று பயம் கொண்டிருந்தார்கள். என்னுடைய நண்பர்கள் என்னுடைய முடிவை அமைதியாகக் கையாண்டமை எனக்கு ஒரு நல்ல நேரமாக அமைந்தது. மாறாக, அவர்களும் இஸ்லாத்தைப் படிக்க ஆர்வம் காட்டினார்கள்.
ஹிஜாப்
என்னுடைய ஹிஜாபை வைத்து நான் பெருமைப் படுகின்றேன். அது என்னை முடக்கவில்லை. என்னுடைய சிந்தனைகள் என் மூலையை வந்தடைவதை விட்டும் அது என்னைத் தடுக்கவில்லை. எனினும், ஆரம்பத்தில் ஹிஜாப் பற்றி நான் சரியாக அறிந்திருக்கவில்லை.
இஸ்லாம் பற்றிய என்னுடைய ஆய்வு, எனது சமூகத்தில் இஸ்லாம் பற்றிக் காணப்பட்ட எதிர்மiறாயன மனப்பதிவை முற்றாக நீக்கவில்லை. மத்தியகிழக்கில் வாழும் இஸ்லாமியப் பெண்கள் தங்கள் கணவன்மார்களால் பலவந்தமாக ஹிஜாப் அணியக் கட்டளையிடப்பட்டுள்ளார்கள் என்றுதான் எங்களுக்கு கூறப்பட்டிருந்தது. எனினும், நான் ஒரு முஸ்லிம் பெண்மணியிடம் ஹிஜாப் பற்றிக் கேட்டபோது, “என்னை அந்நிய ஆணின் பார்வையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவும், ஒரு பெண் கண்ணியமானவளாகவும், க~;டத்துக்குள்ளாகதவளாகவும் இருக்கவேண்டும் என விரும்பும் இறைவனைத் திருப்திப்படுத்துவதற்காகவும் தான் நான் இதை அணிகிறேன்” என்று தெளிவாகக் கூறினாள். இஸ்லாம் என்னுடைய பார்வையில் பெண்ணுரிமை சம்பந்தமான என்னுடைய கருத்துக்களுடன், சிந்தனைகளுடன் ஒத்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

இஸ்லாத்தை நோக்கிய என்னுடைய இந்தப் பயணத்தில் முஸ்லிம்கள் தோற்றத்திலும், இடங்களிலும், கோத்திரங்களிலும், கலாசாரங்களிலும் பலதரப்பட்டவர்கள் என்பதை நான் அறிந்துகொண்டேன். எனினும் இஸ்லாம் அவர்கள் அனைவரையுமே அரவணைக்கின்றது. மேலும், பெரும்பாலான முஸ்லிம்கள் அமைதியை விரும்பக்கூடியவர்களே என்பதையும் நான் புரிந்துகொண்டேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.