முஸ்லிம்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் “Facebook”

Facebook

உலகின் முதன்மை சமூகவளையதலமான “facebook” தனது முஸ்லிம் பாவனையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக, இஸ்லாத்தையும், நபியவர்களையும் கொச்சைப்படுத்தும் Facebook பக்கங்களை நீக்க முடிவு செய்துள்ளது.

இது முஸ்லிம் facebook பாவனையாளர்கள் நீண்டநாட்களாக வேண்டுகோள் விடுத்துவரும் ஒரு விடயமாகும்.

இதற்காக, Facebook நிறுவனம் மொரோக்கொவைச் சேர்ந்த சில முஸ்லிம் வாலிபர்களை நியமித்துள்ளது. இச்செய்தியை அமெரிக்காவின் ” Top Conservative News ” எனப்படும் இணையதளத்தை மேற்கோள் காட்டி மொரோக்கோவின் பிரபல இணையத்தளமொன்று வெளியிட்டுள்ளது. 

அரபு மற்றும் மொரோக்கோ  முஸ்லிம் வாலிபர்கள் சிலர் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மொரோக்கோவில் உள்ள facebook இன் காரியாலயம் ஒன்றில் அவர்கள் பணிபுரிவார்கள் எனவும் அவ்விணையத்தளம் தெரிவித்துள்ளது.

Facebook இன் இந்த நடவடிக்கையானது, இஸ்லாத்திற்கெதிரான பக்கங்களை நீக்காவிட்டால் தமது நாட்டில் Facebook  ஐ தடைசெய்வோம் என துருக்கி அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தபின்னரே எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரான்சின் “சார்லி ஹெப்டோ” தாக்குதலுக்குப் பின் முஸ்லிம்களுக்கெதிரான பதிவுகள் சமூகவளையதலங்களில் அதிகரித்துள்ளதை காணமுடிகிறது.

இதேவேளை, ஏற்கனவே  கருத்துச் சுதந்திரத்துக்கு தனது Facebook இல் எந்த தடையும் விதிக்கப்படமாட்டது எனக் கூறியிருந்த Facebook உரிமையாளர் “மார்க் சக்கர்பெக்” ஐ  இந்த நடவடிக்கைக்குப் சில பிரான்ஸ் இணையதளங்கள் கடுமையாக சாடியுள்ளன.

இஸ்லாமிய நாடுகளில் Facebook தடை செய்யப்படும் போது ஏற்படும் நஷ்டங்களைப் பயந்து, அவர் தனது சொந்த நலவுகளைக் கவனித்தே செயற்படுவதாக அவ்விணையதளங்கள் கடுமையாக சாடியுள்ளன.

நன்றி : صحيفة البشرى

You might also like

Leave A Reply

Your email address will not be published.