Muslim & Tech World

Facebook இல் நாமாக எவ்வாறு ஒரு Frame உருவாக்குவது

தற்காலத்தில் Facebook இல் பரபரப்பாக பரவக்கூடிய முக்கிய விடயம் Facebook Profile Frame ஆகும். அதாவது தன்னுடைய Profile Picture இல் தன்னுடைய விருப்பத்துக்கு ஏற்றாப்போல் அப்படத்தை சுற்றியோ அல்லது அதன் ஒரு பக்கத்திலோ ஏதாவது ஒன்றை இணைப்பதாகும்.

இதில் தன்னுடைய ஊர், கற்ற பாடசாலை, தனக்கு விருப்பமான ரசிகர்கள் போன்றதை பிரதிபளித்து பல Design கள் உருவாக்கப்பட்டு பலருக்கும் அதை பாவிக்கும் விதத்தில் இது வடிவமைக்கப்படும்.

எனவே இவற்றை கண்ட நாம், எமக்கும் சிலவேளை இதுபோன்று ஒன்று செய்ய ஆசை வரும். ஆனால் இதை செய்யக்கூடிய முறை தெரியாமல் இருக்கலாம்.

இந்த ஆக்கத்தின் மூலமாக இதை வடிவமைக்கும் முறையை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

முதலவதாக எமக்கு விருப்பமான ஒரு Design ஐ நாம் Photoshop, Paint, Power Point போன்ற Design Software ஊடாக நாம் ஒரு Frame ஒன்றை வடிவைத்துக்கொள்வோம்.

பின்பு https://developers.facebook.com/products/camera-effects/frame-studio/ என்ற முகவரிக்கு செல்லவும்.

அதில் உள்ள Try It என்ற Button ஐ அழுத்தவும்.

இதில் Create a Frame என்பதை அழுத்தவும்.

பின்பு Get Started என்பதை அழுத்தியதும் பின்வரும் படத்தில் காட்டப்பட்டவாறு தோன்றும்.

பின்பு Upload Art என்ற Button ஐ அழுத்தி நாம் Design பண்ணிய Frame ஐ Upload செய்ததும் பின்வருமாறு தோன்றும்

பின்பு Next என்பதை அழுத்தியதும் அடுத்ததாக இதன் பெயரை குறிப்பிட வேண்டும்,

அதையும் கொடுத்துவிட்டு பின்பு Next என்பதை அழுத்தவும். 

அடுத்ததாக உங்கள் Account ஐ தெரிவுசெய்து OK என்ற Button ஐ அழுத்தவும். உடனே பின்வருமாறு தோன்றும். அதிலே Publish என்ற Button ஐ அழுத்தவும்.

இனி அவ்வளவுதான் உங்கள் Frame ஐ நீங்கள் பயன்படுத்தி உங்கள் Friend களும் பயன்படுத்தலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.