Muslim & Tech World

ISIS : “குர்ஆன் திரிபுபடுத்தப்பட்டுள்ளது, மீள் எழுதப்படவேண்டும்” ??

ISIS

குர்ஆன் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அது மீள்திருத்தி எழுதப்படவேண்டும் எனவும் ISIS கூறிவருவதாக  இராக்கின் பிரபல தொலைகாட்சி நிறுவனமான “ஆபாகுள் இராக்” செய்தி வெளியிட்டுள்ளது. ISIS இன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மௌஸில் நகரத்தில் இருந்து சில தகவல் தெரிந்த வட்டாரங்கள் இச்செய்தியை வழங்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்களிடத்தில் தற்போது காணப்படும் குர்ஆன் இறக்கப்பட்ட வடிவில் இல்லை என்றும் அதில் உள்ள சில வசனங்கள் பிற்காலத்தில் குர்ஆனை திரிபுபடுத்திய சிலரால், கிறிஸ்தவம் போன்ற ஏனைய மதங்களை திருப்திப்படுத்துவதற்காக உள்நுழைக்கப்பட்டது என்றும் ISIS கூறி வருவதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீக்கப்படவேண்டிய வசனங்களில் சூரா “அல்காபிரூன்” உள்ளடங்கலாக பல வசனங்கள் காணப்படுவதாக அவர்கள் கூறிவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கீழே அச்செய்தி நிறுவனத்தின் அரபு மொழியினாலான வீடியோவைப் பார்க்கலாம் :


நன்றி : Abuliyan

You might also like

Leave A Reply

Your email address will not be published.