“ISIS” பற்றி “உஸாமா” முன்கூட்டியே எச்சரிகை செய்தாரா?
ISIS :
பாகிஸ்தானில் உஸாமா பின் லாதின் பதுங்கியிருந்த இடத்திலிருந்து பாகிஸ்தான் போலீசார் 21 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தைக் கண்டெடுத்துள்ளனர்.
அக்கடிதத்தில் பல முக்கிய விடயங்கள் நுணுக்கமாக எழுதப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவின் “டெய்லி மெயில்” பத்திரிகை இது பற்றி கூறும் போது, “அக்கடிதத்தில் பிற்காலத்தில் முஸ்லிம்களில் மோசமான ஒரு கூட்டம் உருவாகும் எனவும், அவர்களது நடவடிக்கைகளும் மிக மோசமானவைகளாகவும், மனிதாபிமானமற்றவைகளாகும் இருக்கும் எனவும், “அல்கைதா” இவர்களுடன் எவ்வித தொடர்புகளையும் வைக்கக்கூடாது எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறுகிறது.
பின் லாதினின் “அல்கய்தா” தீவிரவாத அமைப்பின் முக்கிய ஒரு உறுப்பினரால் 2011ம் ஆண்டு எழுதப்பட்டதாகக் கூறப்படும் இக்கடிதத்தில்
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது அவர்கள் அநியாயம் செய்தல்
போன்ற அவர்களுடைய சில பண்புகளும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்பண்புகள் அனைத்தும் ISIS க்கு மிகவும் பொருந்துவதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.